வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > கலாச்சாரமும் சமுதாயமும்  >  2013-08-19 15:53:21
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...கற்றனைத்தூறும்..... ஆகாஷ் முத்ராஆகாஷ் முத்ராவை “விண்வெளி முத்ரா” அல்லது “ஜூபிட்டர் முத்ரா” என்றும் சொல்கிறார்கள். ஆகாஷ்(ஆகாயம்) என்ற சொல், விண்வெளியோடு தொடர்புடையது. இது Gyan முத்ராவையொத்தது.
ஆகாஷ் முத்ராவைச் செய்யும் முறை : முதலில் வசதியான முறையில் அமர்ந்து கொண்டு, வலது கையை வலது முழங்காலிலும், இடது கையை இடது முழங்காலிலும் வைத்தபடி அதனதன் கட்டைவிரலின் நுனி, நடுவிரலின் நுனியைத் தொட்டுக்கொண்டிருக்கச் செய்ய வேண்டும். உள்ளங்கைகள் வானை நோக்கியபடியும், மற்ற மூன்று விரல்களும் நேராகவும் நீட்டப்பட்டிருக்க வேண்டும். மிகவும் புகழ்மிக்க இந்த ஆகாஷ் முத்ராவை அதிகாலையில் செய்வது மிகுந்த பலனளிக்கும் என்று சொல்கிறார்கள். இதனைச் செய்யும்போது ஏதாவது நாம செபத்தைச் சொல்லலாம் அல்லது ஏதாவது ஒரு குறைபாட்டிலிருந்து நீங்குவதற்கு விரும்பினால் அதைச் சொல்லிக்கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, உடல் பருமனைக் குறைக்க விரும்பினால், எனது உடல்பருமனைக் குறைப்பதைத் தடுக்கும் சக்தியிலிருந்து விடுபடுகிறேன் என்று சொல்லலாம்.
ஆகாஷ் முத்ராவின் பலன்கள் : ஆகாஷ் முத்ராவைச் செய்வதன்மூலம் நமது உடலிலுள்ள விண்வெளிக்கூறு அதிகரிக்கின்றது. வாழ்வின் கண்ணோட்டம் பரந்து விரிவடைகின்றது. தன்னலவாதிகள் தன்னலமற்றவர்களாக ஆகிறார்கள். தவறான உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் குணப்படுத்துகின்றது. நேர்மறையாக எண்ணும் திறனையும், உள்தூண்டுதல் சக்தியையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கின்றது. தலை உச்சியில் இறைசக்தியை உணர உதவுகின்றது. கால்சியம் சத்தை அதிகரித்து எலும்புகள் உறுதியாக இருக்கவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய் குணமாகவும் உதவுகின்றது. பற்கள் பிரச்சனையை நீக்கி பற்கள் உறுதிபெற உதவுகின்றன. கொட்டாவியால் தாடைகள் இணைந்திருப்பதைக் குணமாக்குகின்றது. இதனால்தான் கொட்டாவி விடும்போது விரல்கள் சுடக்குவிடப்படுகின்றன. ஊக்கமருந்து மற்றும் ஆயுள்காப்பு(கோர்ட்டிசோன்) மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை குணமாக்குகின்றது. நடுவிரல் இதயத்தோடு தொடர்புடையது என்பதால், கட்டுப்படுத்தமுடியாத இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிவப்பு அணுக்கள் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றைக் குணமாக்குகின்றது. ஆகாஷ் முத்ராவைத் தொடர்ந்து செய்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மெல்ல மெல்ல நீங்கும். செபமாலை மணிகளை கட்டைவிரலில் வைத்து நடுவிரலால் உருட்டுவதால் மனது வளமையையும் வல்லமையையும் மகிழ்வையும் பெறுகின்றது.

ஆதாரம் : இணையதளம்
பகிர்ந்து


நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்