வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > கலாச்சாரமும் சமுதாயமும்  >  2013-08-26 16:40:02
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...17,000 டன் உணவுதானியம் வீண்ஆக.26,2013. இந்திய உணவு பாதுகாப்பு சட்டவரைவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டிவரும் வேளையில், கடந்த 3 ஆண்டுகளில் ஏறத்தாழ 17,546 டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
இந்திய உணவுக் கழக சேமிப்புக் கிடங்குகளில் இருந்து, 2012ம் ஆண்டு, ஜூலை வரையான மூன்றாண்டுகளில் இந்த உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கள், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகள் வீணடிக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளது குறிப்பித்தக்கது.

ஆதாரம் : Dinamalar
பகிர்ந்து


நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்