வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > தி௫ச்சபை >  2013-11-18 16:35:06
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...அன்னை மரியாவின் விசுவாசம்விவிலியத்தை வாசிக்கும்போது பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, பல்வேறு மனிதர்கள் விசுவாச வாழ்கைக்கு எவ்வாறு சான்று பகர்ந்தார்கள் என்பதை நாம் வாசிக்கின்றோம். நமது தனிப்பட்ட சுயநல விருப்பு வெறுப்புக்களைத் தூக்கி எறிந்துவிட்டு, இறைவனின் விருப்பத்தை மட்டுமே முழுமையாக நிறைவேற்றுவதே உண்மையான விசுவாசம். எனவேதான் நம்முடைய விசுவாச வாழ்வைப்பற்றி சிந்திக்க தாய் திருச்சபை இந்த விசுவாச ஆண்டை நமக்கு கொடுத்துள்ளது.
பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுக்கின்றார். மெசாபாடோமியாவில் 'ஊர்' என்ற இடத்திலிருந்து இறைவன் அவரை அழைத்தபோது தனது முதிர்ந்த வயதிலும்கூட அனைத்தையும் துறந்துவிட்டு இறைவனின் வார்த்தையை நம்பி தனது விசுவாசப் பயணத்தை ஆரம்பித்தார் ஆபிரகாம். எனவேதான் கடவுள் அவருடைய தள்ளாடும் வயதிலும்கூட ஒரு மகனை அவருக்கு கொடையாக அளித்தார். தவமிருந்து பெற்ற அவருடைய ஒரே மகன் ஈசாக்கை பலியிட கேட்டபோதும்கூட தயங்காமல் இறைவனுக்கு அவனை பலியாக்க முன்வந்த ஆபிராகாமின் விசுவாசம் உண்மையிலே நம்மை வியக்க வைக்கின்றது. எனவேதான் அவர் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுக்கின்றார்.
அவர் நமக்கு மட்டும் விசுவாசத்தின் முன்னோடியாக இல்லாமல் எபிரேயர்களுக்கும்இ இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களுக்கும்கூட விசுவாசத்தின் தந்தையாக இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் விசுவாசத்தின் முன்னோடியாக இருப்பதுபோலஇ புதிய ஏற்பாட்டில் நமக்கு விசுவாசத்தின் எடுத்துக்காட்டாக இருப்பவர் அன்னை மரியாள். அவருடைய விசுவாச வாழ்க்கையை புதிய ஏற்பாடு; நமக்கு தெளிவுப்படுத்துக்கின்றது.
கபிரியேல் தூதர் அன்னை மரியாவிற்கு மங்கள வார்த்தை சொன்னபோது 'இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்' என்று பதிலுரைத்தார். மரியாவின் இந்த சம்மதத்திற்குஇ அடிப்படை உந்துசக்தியாக இருந்தது அவருடைய விசுவாசமே என்பதை நம்மால் மறுக்கவும் மறக்கவும் முடியாது. இதே கருத்தைதான் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பேராலயத்தில் கடந்த மாதம் 12ம் தேதி அளித்த சிறப்பு செய்தியில் வலியுறுத்துக்கின்றார்.
கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரேனேயுஸ் கூறுவதுபோல ஏவாள் தனது கீழ்ப்படியாமையால் மனித குலத்திற்கு கொண்டுவந்த பாவக்கட்டுகளுக்குஇ அன்னை மரியாள் தனது கீழ்ப்படிதலால் தீர்வு கொண்டு வந்தார்.
அன்னை மரியாள் தனது விசுவாசத்தின் மூலமாகத்தான்இ கடவுளின் மகன் இயேசுவை தூய ஆவியின் வல்லமையால் தனது உதிரத்தில் கருத்தரித்தாள். அதே விசுவாசத்தால்தான் தனது கன்னிமை குன்றாமலே அவரை உலகின் மீட்பராக ஈன்றெடுத்தார்.
இறைவன் மீது அவர் கொண்டிருந்த விசுவாசத்தின் உந்துதலால்தான் எலிசபெத்துக்கு உதவி செய்ய விரைந்து சென்று இறைவனுக்கு புகழ்ச்சி கீதம் பாடினார். 'எனதான்மா இறைவனை ஏற்றி போற்றுகின்றது தாழ்நிலை இருந்த அடிமையை இறைவன் கடைக்கண் நோக்கினார் இனி எல்லா தலைமுறையினரும் என்னை பேறுடையாள் என போற்றுமே' என்ற விசுவாச கீதத்தை மகிழ்ச்சியோடு பாடினார்.
இறைவனின் மீட்புப்பணியில் உறுதுணையாக நின்ற மரியாள் தனது மகன் இயேசுவின் பாடுகளில் பங்குகொண்டு கல்வாரியில் அவர் உயிர்விடும் போதும்கூட உடனிருந்தை யோவான் நற்செய்தி 19ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். பத்துமாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து பாலூட்டி தாலாட்டி வளர்த்த அன்பு மகனை எந்தவொரு தாயும் கொடூரமான சாவிற்கு கையளிக்க முன்வரமாட்டார். ஆனால் அன்றைய சமுதாயத்தால் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பெண்கள் மத்தியில் வாழ்ந்த மரியாள் தைரியத்தோடும் துணிச்சலோடும் சிலுவை அடியில் நின்று பலிகொடுக்க முன்வந்த அன்னை மரியாவின் அசைக்க முடியாத விசுவாசம்இ நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இத்தகைய ஒரு வீரச்செயலை செய்து நம்முடைய விசுவாசத்தின் முன்னோடியாக இருப்பவர் நம் அன்னை மரியாள்.
இயேசுவின் இறப்பிற்கும் உயிர்ப்பிற்கும் பின்னால்கூட அன்னை மரியாள் விசுவாசம் மிகுந்த ஒரு பெண்ணாக ஆதி திருச்சபையில் வாழ்ந்ததை திருத்தூதர் பணி 1ஆம் அதிகாரம் 14ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். எனவே அன்னை மரியாளின் விசுவாசம் நமது வாழ்கைக்கு எவ்வாறு முன் உதாரணமாக இருக்கிறது என்பதை சிறிது சிந்தித்து பார்ப்போம்.
நமது சொந்த வாழ்க்கையில் நமது விருப்பு வெறுப்புக்களை களைந்துஇ இறைவனின் திட்டத்தை நமது வாழ்க்கையில் செயல்பட முன்வரும்போதுதான்இ நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்க்கின்றோம். அன்னை மரியாள் எவ்வாறு தனது கீழ்ப்படிதலின் மூலமாகவும்இ தனது பிறரன்பு பணியின் மூலமாகவும்இ இயேசுவின் துன்பங்களில் பங்கெடுப்பதன் மூலமாகவும்இ தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினாரோ அதைப்போல நாமும் நமது விசுவாசத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் முழுமையாக வாழ முயற்சி செய்வோம்.
'செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்' என்றுஇ புனித யாக்கோபு எமுதிய திருமுகம் 2ஆம் அதிகாரம் 26ஆம் வசனம் சொல்வதுபோல நமது விசுவாசத்தை நமது செயல்பாடுகளில் வெளிப்படுத்த வேண்டும்.
நமது குடும்பங்களில் ஒருவர் ஒருவரை முழுமையாக ஏற்றுகொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்யும்போதுஇ இறைவனின் பிள்ளைகளாகிறோம் விசுவாசத்தின் ஒளி விளக்குகளாக சுடர் விடுகின்றோம். ஏழைகள்இ அனாதைகள் நோயுற்றோர் கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டும்போதுஇ நமது விசுவாசத்திற்கு உண்மையான சான்று பகர்;கின்றோம்.
எனவேஇ இறையேசுவில் பிரியமானவர்களேஇ விசுவாச ஆண்டின் நிறைவு நாட்களில் வாழ்;கின்ற நமக்கு விசுவாசத்தின் அன்னையாம் மரியாவை நமக்கு தாயாக அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அருள் மிகப் பெற்றவராய் விண்ணக மண்ணக அரசியாக இருந்து இறைவனுக்கும் நமக்கும் தாயான மரியாள்இ உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில்இ ஒவ்வொரு நாளும் அன்பின் பாதையில் வழிநடத்த உங்களுக்காக செபிக்கின்றேன். அனைவருக்கும் நன்றி.
(அ.சகோ.லூ.ஜான்பால், மரியின் ஊழியர் சபை, தூய அலெக்சிஸ் கல்லூரி, உரோமை)
பகிர்ந்து


நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்