வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > தி௫ச்சபை >  2014-01-04 15:21:38
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...புனிதரும் மனிதரே - புனித John Neumannஅமெரிக்காவின் பிலடெல்பியா மறைமாவட்டத்தில், ஒரு கிராம மக்கள், தங்கள் ஆயரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அப்போது, உரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சிறு லாரி அங்கு வந்து நின்றது. அந்த லாரியின் பின்புறம் உரமூட்டைகள் அடுக்கியிருந்த பகுதியில் ஒரு பலகையின் மேல் அமர்ந்திருந்த ஆயர் இறங்கி வந்தார்.
இவர் ஆயராவதற்கு முன்னர், அருள்பணியாளராகப் பணியாற்றுகையில், ஒரு நாள் கொட்டும் மழையில் தன் பணிகளை முடித்துவிட்டு இல்லம் திரும்பினார். அந்த இல்லத்தின் கண்காணிப்பாளர் அவரிடம், "சாமி, உங்கள் காலணிகளை மாற்றிக் கொள்ளுங்கள்... அவை மிகவும் நனைந்துவிட்டன" என்று கூறினார். அதற்கு அந்த அருள்பணியாளர், "காலணிகளை மாற்றுவது என்றால், என் வலது காலணியை இடது காலிலும், இடது காலணியை வலது காலிலும் மாற்ற மட்டுமே முடியும். என்னிடம் உள்ளது இந்த ஒரு ஜோடி காலணிகள் மட்டுமே" என்று கூறினார்.
இத்தகைய எளிமையில் வாழ்ந்தவர், புனித John Neumann. 1811ம் ஆண்டு Bohemiaவில் பிறந்த இவர், அமெரிக்காவில் அருள்பணியாளராகவும், ஆயராகவும் பணியாற்றினார். அமெரிக்காவில், மறைமாவட்ட அளவில், கத்தோலிக்கப் பள்ளிகளை முதல் முதல் நிறுவியவர் இவரே. உலக மீட்பர் துறவுச் சபையைச் சேர்ந்த புனித John Neumann அவர்கள், 1860ம் ஆண்டு, சனவரி 5ம் தேதி, தனது 48வது வயதில், இறையடி சேர்ந்தார்.
பகிர்ந்து


நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்