2008-09-06 13:06:30

இந்தியாவில் இடம் பெறும் வன்முறைகளை அகற்றுவதற்கு உண்மையான கிறிஸ்துவின் சீடர்கள் தேவைப்படுகிறார்கள் - அருட்சகோதரி நிர்மலா


இந்தியாவில் இடம் பெறும் வன்முறைகளை அகற்றுவதற்கு உண்மையான கிறிஸ்துவின் சீடர்கள் தேவைப்படுகிறார்கள் என்று அன்னை தெரேசா சபையின் அதிபர் அருட்சகோதரி நிர்மலா ஜோசி ௬றினார்.

அண்மை வாரங்களாக வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு கிறிஸ்தவத்திற்குச் சாட்சி சொல்லக் ௬டியவர்கள் தேவை என்றும், அவர்கள் உண்மையான கிறிஸ்துவின் சீடர்களாக இருந்து கிறிஸ்துவை மிகுதியாக அன்பு செய்து அவரது மலைப்பொழிவுப் போதனைகளை முழுமையாய் வாழக் ௬டியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அருட்சகோதரி நிர்மலா, திருப்பீடத் தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் ௬றினார்.

மேலும் ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஒருமைப்பாட்டு உணர்வைத் தெரிவிக்கும் விதமாக இந்திய திருச்சபை இஞ்ஞாயிறன்று செபம் மற்றும் உண்ணா நோன்பை அனுசரிக்கின்றது.

இதே நோக்கத்திற்காக இத்தாலியின் பொலோஞ்ஞா உயர் மறைமாவட்ட பேராயர் கார்லோ கப்பாரா, செப்டம்பர் 9ம் தேதி செபம் மற்றும் உண்ணா நோன்பை அனுசரிக்க தனது மறைமாவட்ட விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய கிறிஸ்தவ சமுதாயம் கடும் சோதனைகளை அனுபவித்து வருகின்றது, அவர்களுக்கு செபம் முலம் ஆதரவாய் இருப்போம் என்றும் பேராயர் கப்பாரா ௬றினார்.








All the contents on this site are copyrighted ©.