2009-01-09 19:47:04

ஒரிசா நிலவரம் - ஊடகத்தொடர்பாளர் ஜான் தயாள். 090109 .


உச்சநீதிமன்றம் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கமுடியாத நிலையில் பதவி இறங்குமாறு அறிவுறுத்தியிருந்தும் ஒரிசா அரசு நிலைமையில் எந்தவித மாற்றமும் கொண்டுவர முயல்வதாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார் ஜான் தயாள் . காவல் நிலையங்களும் பாதுகாப்புக்கு ஒத்துழைப்புக் கொடுப்பாதாகத் தெரியவில்லை . ஒரிசாவில் சங் பரிவார் கட்சியின் தூண்டுதலால் குண்டர்கள் பயங்கர ஆயுதங்களோடு தங்களைத் தாக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கிறிஸ்தவர்கள் அஞ்சுகிறார்கள் . மத்திய அரசின் காவலர்கள் 6000 பேர் , மற்றும் ஹெலிகாப்டர்கள் ரோந்துவந்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடப் பாதுகாப்புக் கொடுத்திருந்தனர் . உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் நிலைமை பற்றி ஆராய்ந்து கொடுத்த தகவலில் காந்தமாலில் ஏமாற்றம் தரும் அமைதியே நிலவுகிறது எனக் கூறியுள்ளார் . காட்டுப்பகுதி கிராமங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு நிம்மதியும் அமைதியும் எட்டாத கனவாக இருப்பதாகச் செய்தித் தொடர்பாளர் ஜான் தயாள் மேலும் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.