2009-01-15 20:20:26

உரோமையில் சிரியாக் கத்தோலிக்கத் திருச்சபையின் கருத்தரங்கு .150109 .


திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் சிரியாக் கத்தோலிக்கத் திருச்சபையின் மீது கொண்டுள்ள ஆயருக்குரிய கரிசனை காரணமாக சிரியாக் கத்தோலிக்கச் சபையின் கருத்தரங்கைக் கூட்டியுள்ளார் . இக்கருத்தரங்கு உரோமையில் இம்மாதம் 17 தேதியிலிருந்து 23 தேதிவரை நடக்கவுள்ளது . அதுபோது உறுப்பினர்கள் அந்தியோக்கிற்கான புது பிதாப்பிதாவைத் தேர்ந்தெடுப்பார்கள் . புதுப்பிதா சிரியாக்திருச்சபைக்கும் கீழைத்திருச்சபைக்கும் தலைவராக இருப்பார் . கருத்தரங்கு தொடங்குவதற்கு முந்தைய இரு நாட்களுக்கு செபமும் தியானமும் நடக்கவுள்ளது .கீழைத்திருச்சபைகளுக்கான வத்திக்கான் திருப்பீடத்தின் மன்றத் தலைவர் கர்தினால் இலெயோநார்டோ சாண்ட்ரி தலைமை தாங்க உள்ளார் .








All the contents on this site are copyrighted ©.