2009-06-04 18:04:03

விமான விபத்தில் மரித்தவர்களுக்காக துக்க வழிபாடு . 040609 .


447 என்ற இலக்கம் கொண்ட ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் மாண்ட 228 பேர் ஆன்மா சாந்தியடைய பிரான்ஸ் நாட்டின் புகழ் மிக்க நோட்டர்டாம் பேராலயத்தில் ஜூன் மாதம் 3 ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது . பாரிசின் கர்தினால் ஆந்த்ரே விங் த்ருவா வழிபாட்டை நடத்தினார் . பல் சமய உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர் . ஏர் பிரான்சும் பாரிஸ் மறைமாவட்ட கத்தோலிக்கச் சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன . நாட்டுத் தலைவர் நிக்கோலாஸ் சார்க்கோசியும் , முந்நாள் தலைவர் ஜாக் சிராக்கும் வழிபாட்டில் கலந்து கொண்டனர் . மே 31 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் 216 பயணியரும் 12 விமான பணியாளர்களும் மாண்டனர் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தம்முடைய வருத்தத்தையும் , செபங்களையும் வத்திக்கான் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே வழியாக இந்த வழிபாட்டுக்கு முன்னர் பிரான்சில் உள்ள வத்திக்கான் தூதர் பார்த்துநாத்தோ பால்தெல்லிக்கு அனுப்பியிருந்தார் . இறந்தவர்களுடைய குடும்பத்தாரின் அதிர்ச்சியும் வேதனையும் குறைய வழிபாட்டில் மன்றாடுவதாகத் தெரிவித்தார் பேராலயக்குரு பிரான்சிஸ் த்ருப்தில் .








All the contents on this site are copyrighted ©.