2009-07-25 14:36:50

ஷங்காயில் குடும்பங்கள் இரண்டு குழந்தைகளைக் கொண்டிருக்க அரசு திட்டம்


ஜூலை25,2009. சீனாவில் நீண்டகாலமாக அமுலில் இருந்துவரும் அரசு கொள்கையொன்றை பின்னோக்கித் தள்ளும் விதமாக, மக்கள் பெரிய குடும்பங்களை கொண்டிருப்பதை ஊக்குவிக்க தீர்மானித்துள்ளது அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷங்காய்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆள் பற்றாக்குறையைத் தீர்க்கும் விதமாக, தம்பதியர் இரண்டு குழந்தைகளைக் கொண்டிருக்க வேண்டுமென நகரத்தின் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்ட ஆணையத்தின் தலைமை அதிகாரி கூறுகிறார்.

2020 ஆம் ஆண்டில் ஷங்காயின் மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்காக 60 வயதைக் கடந்தவர்களே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1979 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சீன அதிகாரிகள் பெரிய குடும்பங்களை ஆர்வத்துடன் ஊக்குவிக்கும் முதல் நிகழ்வு இதுவாக இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.