2009-08-08 14:51:11

கிறிஸ்தவர்களைத் தாக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க அரசுத்தலைவரை வலியுறுத்தத் திட்டம், இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் கன்செர்ன்


ஆக.08,2009. பாகிஸ்தானில் தங்கள் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களைத் தாக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அரசுத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியை வலியுறுத்தத் திட்டமிட்டு வருகிறது இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் கன்செர்ன் என்ற சர்வதேச கிறிஸ்தவ அமைப்பு.

பாகிஸ்தானில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் கிறிஸ்தவர்களைத் தாக்கி மரணங்களையும் கடும் சேதங்களையும் ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுத்தலைவரை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளது இவ்வமைப்பு.

கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் முதல் தேதிகளில் நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளில் குறைந்தது எட்டு கிறிஸ்தவர்கள் இறந்தனர், 35க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் படுகாயமடைந்தனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீயினால் எரிக்கப்பட்டன.

அச்சம்பவங்களுக்குப் பின்னர் 45 பெண்களும் சிறாரும் காணாமற்போயுள்ளனர் என்றும் இவ்வமைப்பு கூறுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.