2009-08-18 17:33:53

காலக்கண்ணாடி ஆகஸ்ட் 19 .


1493ஆஸ்திரியாவின் முதலாம் மாக்சிமிலியன் கத்தோலிக்கச் சமயத்தில் சேர்ந்தார்.

1561 ஸ்காட்லாந்து அரசி மேரி இங்கிலாந்தின் அரசியாகப் பதவி ஏற்றார் .

1613 முதலாவது ஆங்கில அரசுக் கவிஞர் ஜான் ட்ரைடன் பிறந்த நாள் .

1796 ஸ்பெயினும் பிரான்சும் இங்கிலாந்துக்கு எதிராக ஒப்பந்தம் செய்தனர்.

1849 கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1871 விமானம் கண்டுபிடித்த ஆர்வி்ல் ரைட் பிறந்த நாள் .

1897 பாட்டரியால் கார் ஓட்டப்பட்டது .

1913 முதலாவதாக பாராசூட்டிலிருந்து பிரான்சு நாட்டு வீரர் குதித்தார்.

1914 ஜெர்மன் இராணுவம் 150 பெல்ஜிய நாட்டவர்களைச் சுட்டுக் கொன்றது .

1919 இங்கிலாந்திலிருந்து ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது.

1946 42 ஆவதுஅமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் பிறந்த நாள் .

1960 5 ஆவது ஸ்புட்னிக் 2 நாய்களையும் 5 எலிகளையும் விண்ணுக்குச் செலுத்தி மீண்டும் தரையிறக்கியது.

1991 புரட்சியாளர்கள் ரஷ்யப் பிரதமர் மைக்கிள் கோர்பச்சேவை பதவி நீக்கினர்.

நம் சிந்தனைக்கு – நாம் எதுவும் இனிச் செய்ய இயலாது என்ற கையறு நிலையில் இருக்கும்போதுதான் முக்கியமாக நாம் ஆண்டவனின் அருளை நம்பி அவரிடம் செபிக்கவேண்டும்.

மேலும் நல்லதோர் செயலைப் பாராட்டி மகிழ்வது அவ்வாறு நல்லதைச் செய்வதைப் போல மிக முக்கியமானது.








All the contents on this site are copyrighted ©.