2009-09-23 10:57:31

திருத்தந்தையும் ரஷ்ய ஆர்தொடாக்ஸ் பிதாப்பிதாவும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆர்தொடாக்ஸ் பேராயர்


செப். 23, 2009 கத்தோலிக்கத் திருச்சபையும் ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவ சபையும் தங்களுக் கிடையேயான பிரிவினைகள் மற்றும் போட்டிகளைக் கைவிட்டு, ஒருமைப் பாட்டிலும் ஒருவர் மற்றவர் மீதான அன்பிலும் ஒத்துழைக்க எண்ணற்றக் காரணங்கள் உள்ளன என்றார் ஆர்தொடாக்ஸ் பேராயர் ஹிலேரியன் அல்டேஎவ்.

திருத்தந்தையையும் திருப்பீட அதிகாரிகளையும் கடந்த வார இறுதியில் சந்தித்த ரஷ்ய ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் வெளி விவகாரங்களுக்கான துறையின் தலைவர் பேராயர் அல்டேஎவ், கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பாதுகாப்பதற்கான திருத்தந்தையின் அர்ப்பணத்திற்கு ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவ சபை முழு ஆதரவையும் வழங்குவதாகவும் திருத்தந்தையும் ரஷ்ய ஆர்தொடாக்ஸ் பிதாப்பிதா கிரில் ம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் 1054 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிளவால் ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவ சபை பிறந்தது.







All the contents on this site are copyrighted ©.