2009-10-01 17:15:22

வருகிற அக்டோபர் 4 அன்று  "வாழ்வை மதிக்கும் ஞாயிறு" 


அக். 2, 2009 கருவில் உள்ள குழந்தைகள், வயதானோர், ஏழைகள், குடிபெயர்ந்தோர் ஆகியோர் வாழ்வின் விளிம்பில் இருக்கிறார்கள் எனவும் இவர்களை மதிக்கவும், காக்கவும் கடமைப் பட்டிருக்கிறோம் எனவும் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி "வாழ்வை மதிக்கும் ஞாயிறு" என்று கொண்டாடப்படுவதையொட்டி, பிலடெல்பியாவின் கர்தினால் ஜஸ்டின் ரிகாலி கூறியுள்ளார். வாழ்வை மதிக்கும் திட்டங்களும், செயல்பாடுகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆயர் பேரவை 1972 லிருந்தே மேற கொண்டு வரும் ஒரு முயற்சியாகும். வாழ்வுக்கும், மனித மாண்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பல் வேறு திட்டங்கள் அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப் படுகின்றன. அம்மாதத்தின் முதல் ஞாயிறு, அதாவது, வருகிற அக்டோபர் 4 அன்று  "வாழ்வை மதிக்கும் ஞாயிறு" என்று கொண்டாடப் படுவது குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அமேரிக்காவில் நடைபெறும் 10 லட்சம் கரு கலைப்புகளுக்கு ஒரு மாற்றாக இந்த முயற்சி அமையும் என்று தான் எதிபார்ப்பதாக கர்தினால் ரிகாலி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.