2009-11-14 14:31:54

தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்லும் கோடிக்கணக்கான மக்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு 24 மணிநேர உண்ணாவிரதம்


நவ.14,2009 இன்னும், இப்பூமிப்பந்தில் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்லும் கோடிக்கணக்கான மக்களுடன் தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இச்சனிக்கிழமை காலை தொடங்கியுள்ள 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும் இணைந்துள்ளார்.
உலகில் தேவைக்கு அதிகமான உணவு இருக்கும் பொழுது, நூறு கோடிக்கு அதிகமான மக்கள் பசியோல் வாடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று மூனின் பேச்சாளர் மரி ஒகாபே கூறினார்.
ஏழை நாடுகளில் ஏறக்குறைய இருபது கோடிச் சிறாருக்கு ஊட்டச்சத்துணவு குறைவுபடுவதால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஐ.நா.வின் யூனிசெப் கூறியது.
இந்த உலக மாநாட்டில் FAO வின் 192 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள் என்று அந்நிறுவனம் அறிவித்தது.
அதேவேளை, சுமார் அறுபது நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.