2009-11-26 15:38:25

அக்னேலோஇன்றைய உலகில் குருக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு


நவ.26,2009 குருக்களுக்கென அற்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் வணக்கத்துக் குரியவராக போற்றப்படும் அருட்தந்தை அக்னேலோ, இன்றைய உலகில் குருக்கள் வாழவேண்டிய முறைகுறித்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என கலாச்சாரத்திற்கான திருப்பீட அவையின் ஆசியப் பிரிவின் அதிகாரியான அருட்தந்தை தியோதோர் மஸ்கரீனஸ் கூறியுள்ளார். 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இறந்து, 1986ஆம் ஆண்டு வணக்கத்துக்குரியவரென அறிவிக்கப்பட்ட அருட்தந்தை அக்னேலோவின் கல்லறையை நாடி ஆயிரமாயிரம் விசுவாசிகள் நாளும் வருகின்றனர் என அருட்தந்தை மஸ்கரீனஸ் கூறினார். அருட்தந்தை அக்னேலோவின் பெயரால் உருவாகியுள்ள நவநாள் செபங்கள் இன்றுதமிழ், மராத்தி, குஜராத்தி, கொங்கனி எனப் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான விசுவாசிகளால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகிறதெனவும், அருட்தந்தை அக்னேலோவின் வழியாக பலரும் அருள் வரங்களைப் பெறுவதைக் காணமுடிகிறது எனவும் அருட்தந்தை தியோதோர் மஸ்கரீனஸ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.