2010-01-15 15:28:58

மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் போதுமான அரசியல் ஆர்வம் இல்லை- ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க ஆயர்கள்


சன.15,2010 மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் போதுமான ஆர்வம் இல்லை என்று ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

புனித பூமியில் துன்புறும் பாலஸ்தீன மக்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அப்பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எட்டு ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க ஆயர்கள், மத்திய கிழக்குப் பகுதியின் பிரச்சனை நாடுகளின் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும், எனினும் அதனைத் தீர்ப்பதற்குத் தேவையான அரசியல் விருப்பமும் தைரியமும் கிடையாது என்று கூறினர்.

புனித பூமிக்கு அமைதி விரைவில் கிட்டாது, அத்துடன் இஸ்ராயேலருக்கும் பாலஸ்தீனருக்குமிடையே இடைவெளி வளர்ந்து வருகிறது என்று அந்த ஆயர்கள் கவலை தெரிவித்தனர்.

வன்முறை, பாதுகாப்பின்மை, வீடுகள் இடிப்பு, விசா பிரச்சனை, பிரிவினைச் சுவர், நிலஆக்ரமிப்பு மற்றும்பிற கொள்கைகள், இவ்விரண்டு நாடுகளும் சேர்ந்து தீர்வுகாண வேண்டியவை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.