2010-02-11 15:59:21

நாளும் ஒரு நல்லெண்ணம் பிப்ரவரி 12


RealAudioMP3 ஒரு நாள் ஏழு தீவுகளைச் சேர்ந்த ஏழு ரிஷிகளும் பெரிய ஆலமரத்தின் அடியில் சந்தித்தனர். பிரார்த்தனை நேரம் நெருங்கவே, இறைவனிடம் என்ன கேட்கலாம் என்று யோசித்தனர். ஒருவர் உணவு கேட்கலாம் என்று சொல்ல, உடனே அடுத்தவர், இல்லை இல்லை, உடல் வலுவைக் கேட்கலாம் என்றார். உடனே மூன்றாமவர், அறிவைக் கேட்கலாம், ஏனெனில் அறிவினாலே அனைத்தையும் சாதிக்கலாம் என்றார். அதன்பின்னர் ஒருவர் அமைதியைக் கேட்கலாம் என்று சொல்ல, வேறொருவர் அன்பை வேண்டலாம் என்று சொல்ல, கடைசி ரிஷி தியாகத்தைக் கேட்கலாம், ஏனெனில் தியாக உணர்வின்றி நிலையான அன்பு வராது என்றார். இப்படி இந்த ரிஷிகள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்ததைக் கவனித்த ஆலமரம், அவர்களிடம், பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது. எனவே வீண்பேச்சில் நேரத்தைச் செலவிடாமல் முதலில் செபியுங்கள். எது வேண்டுமானாலும் கேளுங்கள். கேட்பதைக் காட்டிலும் வேண்டியதைக் கொடுக்க அவன் இருக்கிறான் என்று கனிவோடு சொல்லியது.

தன்னை அண்டி வரும் அனைவரையும் அரவணைக்கும் லூர்து அன்னை, நம்பிக்கையோடு கேட்பவர்க்கு கேட்டவரம் கொடுப்பவள்







All the contents on this site are copyrighted ©.