2010-03-04 15:31:51

மார்ச் 5 தவக்காலச் சிந்தனை


RealAudioMP3 இறுகிய இதயம் கொண்டவர்களாக பழிவாங்கத் துடிக்கும் தலைமைக் குருக்களையும் பரிசேயரையும் சாடி இயேசு ஓர் உவமையை இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார்.

எரிக் ப்ராம் என்னும் உளவியல் வல்லுநர் மனிதரது பழக்கவழக்கங்கள் பற்றிய ஆய்வில் பொறாமை என்னும் உணர்வை மையப்படுத்துகிறார். பொறாமை உணர்வானது கோபத்திற்கு அழைத்துச் செல்கிறது என்றும், இந்தத் தேவையற்ற அதீத கோபமானது கொலைவெறி உணர்விற்கு இட்டுச் செல்கிறது என்றும் இந்தக் கொலைவெறி உணர்வு முடிவில் கொலையாளியாகச் செயல்பட வைக்கின்றது என்றும் குறிப்பிடுகிறார். ஒரு சிறு நெருப்புப் பொறியில் பெருங்காடே அழிவதைப் போல, பொறாமை உணர்வு மிகுந்த ஆபத்தானது எனக் குறிப்பிடுகிறார். இன்றைய வாசகம் தலைமைக் குருக்களும் பரிசேயரும் இயேசுவின் மீது பொறாமை கொள்வதை அவரை அழிக்க நினைப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தவக்காலத்தில் நாம் தள்ளி வைக்க வேண்டிய ஓர் உணர்வு பொறாமை. I feel J என்னும் பொறாமை உணர்வை சுட்டெரிப்போம். இல்லையேல் அந்தப் பொறாமை உணர்வு நம்மைச் சுட்டெரித்துவிடும்.(வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)








All the contents on this site are copyrighted ©.