2010-03-12 16:09:01

ஆங் சான் சூ கியின் கட்சி அலுவலகங்களை திறக்க மியான்மர் அரசு அனுமதி


மார்ச்12,2010 : மியான்மரின் முக்கிய எதிர்க்கட்சியான ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் மூடப்பட்டிருந்த அலுவலகங்களை திறக்க அந்நாட்டு இராணுவ அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ஆங் சான் சூ கியின் வாகனங்களை ஆளும் அரசின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து மியான்மர் முழுவதும் உள்ள தேசிய ஜனநாயக லீக் கட்சியின் 300 அலுவலகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் நாடு முழுவதும் அக்கட்சியின் அலுவலகங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது மியான்மர் ராணுவ அரசு.

அரசின் உத்தரவை அடுத்து ஜனநாயக கட்சியின் 100 அலுவலகங்கள் உடனடியாக திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மற்ற அலுவலகங்களும் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தலை இவ்வாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்த ராணுவ அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.