2010-03-30 15:17:03

சிறார் பாலியல் துர்ப்பிரயோகத்திலிருந்து காப்பாற்றப்பட திருச்சபை தொடர்ந்து செயல்படும்- Westminster பேராயர்


மார்ச்30,2010 சிறார் பாலியல் துர்ப்பிரயோகத்திலிருந்து காப்பாற்றப்படவும் கடந்த காலங்களில் இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிறாரின் துன்பங்களைக் களையவும் திருச்சபை தன்னைத் தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று இங்கிலாந்தின் Westminster பேராயர் Vincent Nichols உறுதி கூறியுள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் இடம் பெற்றுள்ள சிறார் பாலியல் துர்ப்பிரயோகங்களும் அவை மறைக்கப்பட்டதும் மிகவும் அதிர்ச்சியைத் தருகின்றன மற்றும் அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பேராயர் Nichols, The Times செய்தித்தாளுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் கடும் தவறுகள் செய்யப்பட்டுள்ளன, அதேசமயம் சில புரிந்துகொள்ளாமைகளும் ஏற்ப்டடுள்ளன என்றும் பேராயர் Nicholsன் கட்டுரை கூறுகிறது.

திருச்சபையில் இடம் பெற்றுள்ள சிறார் பாலியல் துர்ப்பிரயோகம் குறித்து இந்நாட்களில் ஊடகங்களில் வெளியிடப்ப்டடுள்ள செய்திகளை முன்னிட்டு இவ்வாறு கட்டுரை எழுதியுள்ளார் பேராயர் நிக்கோல்ஸ்.








All the contents on this site are copyrighted ©.