2010-04-29 15:39:29

சுதந்திரமடைந்ததன் இருநூறாம் ஆண்டைச் சிறப்பித்து வரும் மெக்சிகோ, அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்க வேண்டும் – திருச்சபை அதிகாரி


ஏப்ரல்29,2010 மெக்சிகோ நாடு சுதந்திரமடைந்ததன் இருநூறாம் ஆண்டைச் சிறப்பித்து வரும் இவ்வேளையில், அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிப்பதற்கு அந்நாட்டினர் தங்களது விடுதலையின் உண்மையைக் கண்டுணர வேண்டும் என்று அந்நாட்டின் Guadalajara கர்தினால் ஹூவான் சான்டோவால் இனிகெஸ் ( Juan Sandoval Iniguez ) கூறினார்.

திருச்சபையும் மெக்சிகோவின் சுதந்திரமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் இனிகெஸ், நம்மை விடுதை அடையச் செய்த உண்மையில் ஒப்புரவு ஆவதற்கும் வரலாற்றை நன்றியோடு நினைத்துப் பார்க்கவும் இந்த 200ம் ஆண்டில் நாம் அழைக்கப்புகிறோம் எனவும் கூறினார்.

அமெரிக்காவில் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கின்ற, வட அமெரிக்க நாடான மெக்சிகோ, 1810ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.








All the contents on this site are copyrighted ©.