2010-05-12 16:27:33

உலகில் பசிக்கொடுமையை அகற்றுவதற்கு ஐ.நா.வின் புதிய இணையதள நடவடிக்கை


மே12,2010 உலகில் பசிக்கொடுமையை அகற்றுவதற்கும், உலக அளவில் தினமும் ஆறுபேருக்கு ஒருவர் வீதம் பசியினால் வாடுகின்றனர் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதற்கும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இணையதளத்தில் புதிய நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையைத் தொடங்கி வைத்துப் பேசிய, FAO என்ற ஐ.நா.வின் இவ்வமைப்பின் இயக்குனர் Jacques Diouf, நம்மோடு வாழும் மனிதர்கள் தொடர்ந்து பசியால் வாடுவது கண்டு நாம் வெகுண்டெழ வேண்டும் எனக் கூறினார்.

ஏழையோ பணக்காரரோ இளையோரோ முதியவரோ வளரும் நாடுகளில் இருப்பவர்களோ வளர்ந்த நாடுகளில் இருப்பவர்களோ யாராக இருந்தாலும் இந்த நடவடிக்கையில் சேருமாறு கேட்டுள்ளார் தியோப். “ஒருபில்லியன் பசித்திட்டம்” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இதில் ஒவ்வொருவரும் தங்களின் பெயர்களை மனுக்களுடன் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.