2010-07-24 15:02:57

“நாசரேத்தூர் இயேசு” என்ற நூலின் மூன்றாவது தொகுப்பை திருத்தந்தை எழுதி வருகிறார் - திருப்பீடப் பேச்சாளர்


ஜூலை24,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதியுள்ள புத்தகங்களின் விரிசையில் மூன்றாவதும் கடைசியுமான தொகுப்பை இந்தக் கோடை விடுமுறை நாட்களில் எழுதி வருகிறார் என்று திரு்பபீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை ஃபெடரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.

திருத்தந்தையின் கோடை விடுமுறை குறித்து இவ்வெள்ளியன்று நிருபர்களிடம் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இம்மாதம் 7ம் தேதி காஸ்தெல் கண்டோல்போ சென்ற திருத்தந்தை, உடனடியாக வாசிப்பதிலும் எழுதுவதிலுமாக நேரத்தைச் செலவழித்து வருகிறார் என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தொடங்கிய இயேசுவின் வாழ்க்கை பற்றிய தொகுப்பு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை இதிலிருந்தே உணர முடிகின்றது என்றும் அவர் கூறினார்.

“நாசரேத்தூர் இயேசு” என்ற தலைப்பிலான திருத்தந்தையின் முதல் இரண்டு தொகுப்புகள் சர்வதேச அளவில் அமோக விற்பனையைக் கண்டுள்ளன. தற்சமயம் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிய மூன்றாவது தொகுப்பை திருத்தந்தை எழுதி வருகிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.