2010-08-31 15:55:40

பிரான்ஸில் ஜிப்சிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேராயர் மர்க்கெத்தோ கவலை


ஆக.31,2010. பிரான்ஸ் நாட்டில் ஜிப்சிகள் மற்றும் ரோமா இனத்தைப் பூரிவீகமாகக் கொண்ட நாடோடி மக்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ.

கரவான் வண்டிகளில் வாழ்ந்து வரும் இந்த ரோமா இன மக்களின் முகாம்களைக் கலைக்கவும் இந்த ஆகஸ்ட்டுக்குள் நாட்டை விட்டு வெளியேறுகிறவர்களுககு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் நிக்கோலாஸ் சர்கோசியின் அரசு கொள்கைகளை வகுத்திருந்தது. இந்தச் செப்டம்பர் மாதத்தில் இழப்பீட்டுத் தொகையின்றி அவர்கள் வெளியேற்றப்படலாம் என்று ப்ரெஞ்ச் ஊடகங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற வெளியேற்றங்கள், துன்புறுத்தப்பட்ட, பலவீனமான மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கின்றன என்றுரைத்த திருப்பீடக் குடியேற்றதாரர் அவைச் செயலர் பேராயர் மர்க்கெத்தோ, இந்த மக்கள் இனஒழிப்புச் செயல்களுக்கு பலியாகியிருப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.