2010-09-08 15:57:29

இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கர் குறித்த விவரங்கள்


செப்.08, 2010 திருத்தந்தை மேற்கொள்ள விருக்கும் இங்கிலாந்துக்கான திருப்பயணத்தையொட்டி, வத்திக்கானில் உள்ள புள்ளிவிவரங்கள் சேவை, அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான நிலவரப்படி, இங்கிலாந்தின் 59,381,000 மக்கள்தொகையில், 5,264,000 பேர் கத்தோலிக்கர் என்றும், இது மொத்த மக்கள் தொகையில் 8.87 விழுக்காடு என்றும் கூறப்பட்டுள்ளது.
32 மறைமாவட்டப் பிரிவுகளையும், 2,977 பங்குத் தளங்களையும் கொண்ட இங்கிலாந்தில், 59 ஆயர்கள், 5,225 குருக்கள், 6,479 துறவறத்தார், மற்றும் 34,669 மறைகல்வி ஆசிரியர்கள் பணி செய்கின்றனர் என்று இத்தகவல் கூறுகிறது.பாலர் பள்ளியிலிருந்து, பல்கலை கழகங்கள் வரை 2,828 கல்வி மையங்களும், 171 முதியோர் பராமரிப்பு இல்லங்களும், 79 அநாதை இல்லங்களும் கத்தோலிக்கர்களின் கண்காணிப்பில் இயங்கி வருகிறதென்று இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.