2010-09-23 15:40:35

அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க பிறன்ரன்பு அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்களையொட்டி திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


செப்.23, 2010. ஒவ்வொரு ஆண்டும் 90 லட்சம் மக்களுக்கு உதவி வரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க பிறன்ரன்பு அமைப்பிற்குத் திருத்தந்தை தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இச்சனிக்கிழமை வாஷிங்டனில் ஆரம்பமாகும் இவ்வமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்களையொட்டி திருத்தந்தை இவ்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
திருப்பீடத்தின் Cor Unum அவையின் தலைவரான கர்தினால் Paul Josef Cordesக்கு, திருத்தந்தையின் பெயரால், வத்திக்கான் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தியை கர்தினால் Cordes வாஷிங்டனில் நடைபெறும் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் துவக்கத்தில் வாசித்து, தன் சிறப்பு உரையை வழங்குவார் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.அமெரிக்கக் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் நூறாண்டு சேவைகளைப் பாராட்டும் திருத்தந்தை, தொடர்ந்து அவ்வமைப்பின் மூலம் கிறிஸ்துவின் அன்புக்கு பலரும் சாட்சியம் பகரும் பணியைத் தொடர தன் செபங்களையும் இவ்வாழ்த்தின் மூலம் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.