2010-10-21 15:19:34

அனைத்துலக புள்ளிவிவரங்கள் நாளையொட்டிய ஐ.நா. தலைமைச் செயலரின் அறிக்கை


அக்.21,2010 - புள்ளி விவரங்கள் வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் காணக் கிடக்கின்றது என்றும், இவைகளே அரசு, வணிகத் துறை மற்றும் சமுதாய குழுக்களின் முடிவுகளுக்கு உதவுகின்றன என்றும் ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இப்புதனன்று உலகில் முதல் முறையாகக் கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக புள்ளிவிவரங்கள் நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
2015ம் ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டிய மில்லேன்னியத் திட்டங்கள் பலவற்றிற்கும், சிறப்பாக வறுமையை களைய எடுக்கப்பட வேண்டிய பல திட்டங்களுக்குப் புள்ளி விவரங்கள் மிகவும் உதவும் என்று ஐ.நா.வின் தலைமைச் செயலர் கூறினார்.நடுநிலையுடன் திரட்டப்படும் புள்ளிவிவரங்கள் வெளியிடும் பல உண்மைகள் அரசியலில் உள்ளவர்களால் எதிர்க்கப்படும் என்றும், அவர்களது தலையீட்டையும் கடந்து, உண்மைகளை வெளியிட ஐ.நா.வின் புள்ளிவிவர அங்கம் தயங்காது என்றும், இவ்வங்கத்தின் இயக்குனர் Paul Cheung தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.