2010-10-27 16:32:18

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ள மனித முன்னேற்றத்திற்கான கத்தோலிக்க முயற்சிகள் திட்டம்


அக்.27, 2010 - மனித முன்னேற்றத்திற்கான கத்தோலிக்க முயற்சிகள் என்ற திட்டத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
‘மறுபார்வை, மறுமலர்ச்சி’ என்ற பொருள் கொண்ட இத்திட்டத்தினை இச்செவ்வாயன்று வெளியிட்ட அமெரிக்க ஆயர்கள் பேரவையின் CCHD என்ற பணிக் குழுவின் தலைவரான ஆயர் Roger Morin, இத்திட்டத்தில் ஏழைகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளதென கூறினார்.
பத்து அம்சங்களைக் கொண்ட இத்திட்டம், திருத்தந்தை வெளியிட்ட Caritas in Veritate என்ற சுற்று மடலை அடிப்படையாகக் கொண்டதென்று விளக்கிய ஆயர் மொரின், இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள பத்து அம்சங்களும் கத்தோலிக்கப் படிப்பினைகளை நிலைநிறுத்தும் வழிகள் என்றும், தனிப்பட்ட மனிதர், குடும்பம், திருமணம் ஆகியவற்றின் புனிதத்துவத்தைக் காக்கும் முயற்சிகள் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.