2010-10-28 15:42:39

இலங்கையில் காணாமற் போனவர்களுக்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை - ஆங்கலிக்கன் ஆயர்


அக். 28, 2010 - இலங்கை உள்நாட்டுப் போரில் தலை மறைவானவர்களுக்காக அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து கொழும்புவில் இச்செவ்வாயன்று கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இலங்கையில் வலுக்கட்டாயமாய் நிர்ப்பந்திக்கப்பட்டு காணாமற் போனவர்களை நினைவுக் கூறும் நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி, பல்வேறு கிறிஸ்தவ குழுக்களின் பிரதிநிதிகள், கத்தோலிக்க குருக்கள், மற்றும் சமூக நீதி ஆர்வலர்கள் பலர் காணாமற் போனவர்களின் குடும்பத்தினருடன் இச்செவ்வாயன்று கூட்டம் ஒன்றை நடத்தினர்.
காணாமற் போகும் நிலையை எதிர்த்து செயல்படும் ஆசிய அமைப்பும், இன்னும் பிற சமுதாய நல அமைப்புக்களும் சேர்ந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாய் காணாமற் போனவர்களுக்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என்று Kurunegala பகுதியின் ஆங்கலிக்கன் ஆயர் Kumara Elangasinghe கூறினார்.







All the contents on this site are copyrighted ©.