2010-11-03 15:40:38

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேசில் அரசுத் தலைவர் Dilma Rousseffக்கு ஆயர் பேரவையின் வாழ்த்துச் செய்தி


நவ.03,2010. பிரேசில் நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத் தலைவர் Dilma Rousseffக்கும் வெற்றி பெற்ற பிற வேட்பாளர்களுக்கும் பிரேசில் ஆயர் பேரவை தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளது.
அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Dilma Rousseffம் பிறத் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அமைதி, சமுதாய நீதி இவற்றின் அடிப்படையில் நாட்டை கட்டி எழுப்பவேண்டும் என்றும் ஆயர்களின் இச்செய்தி கூறுகிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது, திருச்சபையின் பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு பிரேசில் ஆயர் பேரவை தனது எதிர்ப்பை கூறிவந்தது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.