2010-11-26 14:58:32

Thanksgiving Day ஒவ்வொரு மதத்தின் அடிப்படையாக உள்ள நன்றியறிதல் உணர்வை வளர்க்கும் ஒரு வாய்ப்பு - அமெரிக்கக் கத்தோலிக்கர்கள்


நவ.26, 2010. இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட நன்றியறிதல் நாள் (Thanksgiving Day) வெறும் மத சார்பற்ற கொண்டாட்டமாக இல்லாமல், ஒவ்வொரு மதத்தின் அடிப்படையாக உள்ள நன்றியறிதல் உணர்வை வளர்க்கும் ஒரு வாய்ப்பு என்று அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் கூறியுள்ளனர்.
இறைவன் தந்த அனைத்து கொடைகளுக்கும் நன்றி சொல்லவும், வாழ்வில் தாங்கள் பெற்ற நன்மைகளுக்குத் தகுந்ததோர் பதிலாக, இல்லாதவர்களோடு தங்களுக்குள்ளவைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த நாள் தரப்பட்டுள்ளதென்று Denver உயர்மறைமாவட்ட கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் தலைவரான முனைவர் Johnathan Reyes கூறினார்.
ஒவ்வொரு வருடமும் நன்றியறிதல் நாளன்று இந்த அமைப்பின் மூலம் வீடற்ற பல நூறு பேருக்கு உணவுகள் வழங்கும் பணி நடந்து வருவதாக Reyes கூறினார்.மேலும், Texas மாநிலத்தில் Houston நகரில் Casa Juan Diego என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நன்றியறிதல் நாளன்று 1000க்கும் அதிகமான வான்கோழிகளை ஏழைகளுக்கு வழங்குவதாகவும், இந்த நாளன்று அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குள் வாழ்வு தேடி வரும் பல நூறு குடியேற்றதாரர்களுக்கு உணவு வழங்குவதாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.