2011-01-19 14:45:09

கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை விற்பனைத் தடைக்குப் பேராயர் ஆதரவு


சன.18,2011 : இந்தியாவில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் புகையிலை விற்பதைத் தடை செய்யும் நகர நிர்வாகம் ஒன்றின் முயற்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் அந்நகரக் கத்தோலிக்கப் பேராயர்.

மத்திய இந்திய நகரமான நாக்பூர் மாநகராட்சி எடுத்துள்ள இம்முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறி அதற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறினார் நாக்பூர் பேராயர் ஆபிரகாம் விருதகுலன்காரா.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நூறு மீட்டர் தூரத்தில் புகையிலை விற்கும் 25 கடைகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக நாக்பூர் மாநகராட்சி இம்மாதம் 11ம் தேதி நடவடிக்கை எடுத்தது







All the contents on this site are copyrighted ©.