2011-04-06 15:40:57

புகுஷிமா அணு உலைகளில் போராடி வரும் பத்து கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களையும் வாழ்த்தும் ஆயர் Tetsuo Hiraga


ஏப்ரல் 06,2011. தங்கள் உயிருக்கு ஆபத்து என்று முழுமையாகத் தெரிந்தும், பொது நலனுக்காக அணுக்கதிர் வீச்சு ஆபத்தைக் குறைக்க புகுஷிமாவில் போராடி வரும் பத்து கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களையும் தான் வாழ்த்துவதாக Sendai ஆயர் Tetsuo Hiraga கூறினார்.
மார்ச் 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றைத் தொடர்ந்து அணு உலைகளில் ஏற்பட்ட கசிவைத் தடுப்பதற்கு உழைத்து வரும் தொழிலாளர்கள் இரண்டாவது அணு உலையின் கான்க்ரீட் சுவரில் ஏற்பட்ட 20 செ.மி. விரிசலை இச்செவ்வாயன்று நிறுத்தியுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இருந்தாலும், இந்த அணு உலைகளால் உருவாகியுள்ள ஆபத்துக்கள் இன்னும் முற்றிலும் தீரவில்லை என்றும் கூறப்படுகிறது.நான்கு அணு உலைகளின் கசிவினால் அப்பகுதியின் நிலம், மற்றும் கடல் நீரில் மிக அதிக அளவு கதிரியக்கம் காணப்படுகிரதென்றும், எனவே ஜப்பானில் இருந்து வரும் உணவுப் பொருட்களை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.