2011-04-11 16:13:21

சீனத்திருச்சபையின் பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகிறது சிறப்பு அவை.


ஏப்ரல் 11, 2011. சீனத்திருச்சபையின் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கென திருத்தந்தையால் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவை தற்போது இத்திங்கள் முதல் வத்திக்கானில் மூன்று நாள் கூட்டத்தை நடத்தி வருகின்றது.
சீனத்திருச்சபையுடன் தொடர்புடைய திருப்பீட அவைகளின் தலைவர்கள் மற்றும் சீனத்திருச்சபைப் பிரதிநிதிகளுடன் இக்கூட்டம் இடம்பெற்று வருவதாக அறிவிக்கிறது திருப்பீடப் பத்திரிகைத்துறை.
ஏற்கனவே 2008, 2009 மற்றும் 2010 மார்ச் மாதங்களில் சீனத்திருச்சபை குறித்து கூடி விவாதித்துள்ள இவ்வவை, இந்த நான்காம் கூட்டத்தில், சீனாவின் இன்றைய சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் நற்செய்தியை எடுத்துரைப்பதில் தலத்திருச்சபை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவாதித்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.