2011-06-11 16:53:58

பெண்களுக்கு எதிரான குற்றம்: விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு


ஜூன் 11,2011. ஆள் கடத்தல், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றம், பாலியல் குற்றங்கள் குறித்து தமிழகத்தின் பள்ளிகள் மற்றும் கிராமங்களில் பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அண்மை காலங்களில் அடிக்கடி நடந்ததற்கு, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் எனக்கூறும் காவல்துறையின் உயர் மட்டத்தினர், இது குறித்து கிராமங்கள், பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.