2011-08-25 14:55:17

பாட்னா திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கென்று தரமான ஒரு திரைப்படம் இலவசமாகக் காட்டப்படும்


ஆக.25,2011. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் அன்னை தெரேசா அகில உலகத் திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக, பாட்னா நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கென்று தரமான ஒரு திரைப்படம் இலவசமாகக் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முயற்சியின் முதல் கட்டமாக, "In the Name of God's Poor" அதாவது, 'இறைவனின் ஏழைகள் பெயரால்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அன்னை தெரேசாவின் வாழ்வைக் குறித்தத் திரைப்படம் இலவசமாகக் காட்டப்படும்.
இதைத் தொடர்ந்து 'குழந்தைகள் திரைப்படக் கழகம்' ஒன்று அமைக்கப்படும் என்றும், அதன் வழியாக நல்ல மதிப்பீடுகள் நிறைந்த, தரமானத் திரைப்படங்கள் குழைந்தைகளுக்குக் காட்டப்படும் என்றும் பாட்னாவில் உள்ள AASRA பிறரன்பு அறக்கட்டளையும், Regent திரையரங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.