2011-11-30 15:53:24

திருவருகைக் காலத்தையொட்டி, அருள் பணியாளர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza விடுத்துள்ள செய்தி


நவ.30,2011. இயேசு இவ்வுலகிற்கு முதல்முறை வந்தபோது அவரை முழு உள்ளத்துடன் வரவேற்ற மரியாவின் மனதை அனைத்து கத்தோலிக்க அருள் பணியாளர்களும் கொண்டிருக்க வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மையில் துவங்கிய திருவருகைக் காலத்தையொட்டி, அருள் பணியாளர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza விடுத்துள்ள ஒரு செய்தியில், அருள் பணியாளர்கள் அன்னை மரியாவைப் போல் செபத்தில் இறைவனை வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு தாய்க்கும் உரிய கண்காணிப்புடனும், ஆதங்கத்துடனும் அன்னை மரியா இயேசுவின் பிறப்பில் இருந்து கல்வாரி மரணம் வரை அவருடன் பயணித்ததைப் போல், குருக்களும் கிறிஸ்துவுடன் பயணிக்க வேண்டும் என்று கர்தினால் Piacenza தன் செய்தியில் கூறியுள்ளார்.
கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணித்துள்ள குருக்களை விண்ணகத்தில் இறைவன் பிரசன்னத்தில் ஒவ்வொரு நாளும் மரியா நினைவுகூருவது உறுதி என்றும் கர்தினால் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.