2012-02-23 15:11:35

எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல - கர்தினால் Sarr


பிப்.23,2012. முன்னொரு காலத்தில் குடியரசுக்கும் நிலையான வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய செனெகல் நாடு தற்போது குழப்பத்தில் ஆழ்ந்து வருவது பெரும் வேதனையைத் தருகிறது என்று கர்தினால் Thédore Adrien Sarr கூறினார்.
தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் செனெகல் நாட்டில் தற்போது நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க கலந்துரையாடல் மிக அவசியம் என்று சுட்டிக் காட்டிய Dakar பேராயர் கர்தினால் Sarr, இந்த அமைதி வழிக்குப் பதிலாக எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று எடுத்துரைத்தார்.
பிப்ரவரி 26, வருகிற ஞாயிறன்று அந்நாட்டின் அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலைக் குறித்து Misna செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், அரசியல் கட்சிகள் நடந்துகொள்ள வேண்டிய வழிகளைப் பற்றி கர்தினால் Sarr தன் எண்ணங்களை வெளியிட்டார்.
நடைபெறவிருக்கும் தேர்தலும் அதைத் தொடரும் நிலையான அரசும் இளையோர் உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் Sarr, இளையோர் நல்லதோர் எதிர்காலத்தைக் காண்பதற்கு, நாட்டில் நிலையான அரசு உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.