2012-07-18 15:46:36

ஜூலை 18,2012 கவிதைக்கனவுகள் ....... வெல்லமுடியாத சக்தி - இக்கவிதைக்கு உரிமையாளர் அறிவியல்மேதை டாக்டர் அப்துல் கலாம்


நான் கடலில் நீந்தினேன், நீந்தினேன், நீந்திக் கொண்டிருந்தேன்,
ஓயாமல் சுழன்றடித்தது கடல் அலைகள்,
எதிர் நீச்சல் போட்டேன், என் இலக்கைச் சென்றடைய.
மேற்கொண்டது என்னை, அதி சக்திவாய்ந்த அலை.
இழுத்தது, என்னை அதன் போக்கில், இழந்தேன் என்னை,
என் நம்பிக்கையை ஒரு நொடியில் இழந்தேன்.
அக்கணத்தில் எனக்குள் தோன்றியது ஒரு மின்னல்,
ஆம் அது தான் துணிச்சல், துணிச்சல், துணிச்சல்.
என் இலக்கை நான் அடைய வேண்டும் என்ற துணிச்சல்.
கடலலையையேத் தோற்கடித்து வெற்றி பெறவேண்டும் என்ற துணிச்சல்.
துணிச்சலை என் மனதில் வைத்தேன், யாராலும்
வெல்ல முடியாத சக்தி என்னை ஆட்கொண்டது.
வெல்லமுடியாத சக்தியை மனதிலும், செயலிலும் கொண்டேன்
இழந்த நம்பிக்கை என்னிடம் மீண்டும் வந்தது.
ஆம், என்னால் வெல்ல முடியும், என்னால் வெல்ல முடியும்
என்ற சக்தி என்னுள் பிறந்தது.
வெல்லமுடியாத அந்த சக்தியால்,
அதி சக்தி வாய்ந்த அந்தக் கடலலையை வென்றேன்
ஆம், என் இலக்கை நான் அடைந்தேன், வெற்றியுடன்.








All the contents on this site are copyrighted ©.