2012-10-24 15:31:07

அமெரிக்க ஆயர்கள் பேரவை பத்து புனிதர்களை மக்களின் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது


அக்.24,2012. நடைபெறும் நம்பிக்கை ஆண்டில் புனிதர்களின் வாழ்வை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளும் வகையில் அமெரிக்க ஆயர்கள் பேரவை பத்து புனிதர்களை மக்களின் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது.
1646ம் ஆண்டு Iroquois என்ற பழங்குடியினரால் கொடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாகி, கொல்லப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Isaac Jogues, ஹவாய் தீவில் தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து, தானும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு 1889ம் ஆண்டு உயிரிழந்த புனித St. Damien de Veuster, இம்மாதம் 21ம் தேதி புனிதர்களாக உயர்த்தப்பட்ட Kateri Tekakwitha, மற்றும் Marianne Cope, உட்பட பத்து புனிதர்களை ஆயர்கள் பேரவை மக்கள் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது.இவர்கள் அனைவருமே அமெரிக்க மண்ணில் வாழ்ந்தவர்கள், அல்லது அமெரிக்க மக்களுக்குப் பணிகள் புரிந்தவர்கள். இவர்களில் மூவர் ஆண்கள், ஏழு பேர் பெண்கள்.







All the contents on this site are copyrighted ©.