2012-12-05 16:14:57

கிறிஸ்மஸ் காலத்தின் நம்பிக்கை செய்தி குழந்தைகளை முக்கியமாகச் சென்றடைய வேண்டும் - ஈராக் பேராயர்


டிச.05,2012. நம்பிக்கையையும், பகிர்வையும் வளர்க்கும் கிறிஸ்மஸ் காலத்தின் அடிப்படை செய்தி குழந்தைகளை முக்கியமாகச் சென்றடைய வேண்டும் என்று ஈராக் பேராயர் ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள திருவருகைக் காலத்தையொட்டி தன் கிறிஸ்மஸ் செய்தியை வெளியிட்ட கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ, குழந்தைகளுக்கு உதவிகள் செய்யும்வண்ணம் நிதிதிரட்டும் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பேராயரின் அழைப்பைத் தொடர்ந்து, எதிர்பார்ப்பைக் கடந்து, குழந்தைகள் நிதிக்கு அதிகத் தொகையை இளையோர் திரட்டியுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கிறிஸ்மஸ் காலம் முழுவதும் திரட்டப்படும் இத்தொகை ஈராக்கின் வன்முறைகளால் பெற்றோரை இழந்துத் தவிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமியக் குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று பேராயர் சாக்கோ அறிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.