2012-12-24 13:29:50

வத்திக்கான் வானொலி குடும்பத்தினர் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்
24-12-2012


வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! என்று கடவுளைப் புகழ்ந்தது.
(லூக்கா நற்செய்தி 2: 10-14)

இன்று (டிசம்பர் 24 மாலை மற்றும் 25 காலை) நம் ஒலிபரப்பில், தூத்துக்குடி ஆயர் மேதகு இவோன் அம்ப்ருவாஸ் அவர்களும், பாளையம்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் XIBA எனப்படும் மேலாண்மையியல் மையத்தின் இயக்குனராகப் பணியாற்றும் அருள்தந்தை ஜோ அருண் அவர்களும் வழங்கும் கிறிஸ்மஸ் செய்திகளுடன், கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. RealAudioMP3 RealAudioMP3

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மேல் மாடத்திலிருந்து வழங்கும் ‘Urbi et Orbi’ அதாவது 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற சிறப்புச்செய்தி நாளை, டிசம்பர் 25, செவ்வாய் மாலை, மற்றும் புதன் காலை வத்திக்கான் வானொலியில் ஒலிபரப்பாகும். கேட்டு மகிழவும், பயன்பெறவும் உங்களை அழைக்கிறோம்...
மீண்டும் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின்
அன்பு வாழ்த்துக்கள்








All the contents on this site are copyrighted ©.