2013-01-11 15:26:17

கர்தினால் டோலன் : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உறுதியான அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமைத்துவம் தேவை


சன.11,2013. மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உறுதியான அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமைத்துவம் தேவைப்படுகின்றது என்று நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன் கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நீதியையும் நிலையான அமைதியையும் கட்டியெழுப்புவதில் அவ்விரு தரப்பினருக்கும் இருக்கின்ற கடமையை ஆணித்தரமாக வலியுறுத்துவதற்கு, உறுதியான அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமைத்துவம் தேவை என்று கர்தினால் டோலன் மேலும் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் டோலன் மற்றும் அந்த ஆயர் பேரவையின் அனைத்துலக நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Richard Pates ஆகிய இருவரும் இணைந்து அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளின் தீர்வுக்கு அரசுத்தலைவர் ஒபாமா உறுதியான ஆதரவு அளிப்பார் எனவும், மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கான அமெரிக்கத் தலைமைத்துவத்துக்கு ஆயர்களாகிய தாங்கள் ஆதரவளிப்போம் எனவும் அக்கடிதத்தில் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.