2013-03-06 15:29:51

புகையிலை, மதுபானங்கள் ஆகியவற்றின் பழக்கங்களிலிருந்து மக்களைக் காக்கும் முயற்சிகளில் காரித்தாஸ் அமைப்பு


மார்ச்,06,2013. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் புகையிலை, மதுபானங்கள் ஆகியவற்றின் பழக்கங்களிலிருந்து மக்களைக் காக்கும் முயற்சிகளில் காரித்தாஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் மஜ்ஹோட்டா (Majhota) என்ற கிராம மக்கள் இணைந்து எடுத்துள்ள ஒரு முடிவின்படி, புகையிலை மற்றும் மதுபானம் இவற்றைப் பயன்படுத்தும் மனிதர்கள் 1100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவையும், அந்த ஊர் மக்கள் எடுத்து வரும் முயற்சிகளையும் காரித்தாஸ் அமைப்பு ஆதரிப்பதாக இந்திய காரித்தாஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் அருள் பணியாளர் Frederick D'Souza, UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
2011ம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேச மாநிலம் புகையிலைப் பயன்பாட்டைத் தடை செய்திருந்த போதிலும், கிராம மக்கள் மத்தியில் இதன் பயன்பாடு அதிகம் இருப்பதால், வாய் புற்றுநோய் அப்பகுதியில் அதிகம் உள்ளதென்று காரித்தாஸ் மருத்துவப் பணியாளர் Bency Joseph கூறினார்.








All the contents on this site are copyrighted ©.