2013-03-07 16:14:27

வட, தென் கொரிய நாடுகள் அணு ஆயுதங்களைக் களைந்து, உரையாடல் முயற்சிகளில் ஈடுபடுவதே இரு நாடுகளையும் காக்கும் - Seoul பேராயர்


மார்ச்,07,2013. வட, மற்றும் தென் கொரிய நாடுகள் அணு ஆயுதங்களைக் களைந்து, உரையாடல் முயற்சிகளில் ஈடுபடுவதே இரு நாடுகளையும் காக்கும் என்று Seoul பேராயர் Yeom Soo-jung கூறினார்.
Seoul உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பணியையும், வட கொரியாவின் Pyongyang மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகப் பணியையும் இணைந்து ஆற்றும் தனக்கு இவ்விரு நாடுகளின் மக்களும் முக்கியமானவர்கள் என்று பேராயர் Soo-jung எடுத்துரைத்தார்.
வட கொரியா அண்மையில் மேற்கொண்ட அணு ஆயுத ஆய்வுகளையும், தென் கொரியாவில் புதிய அரசுத் தலைவர் பதவி ஏற்றதையும் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Soo-jung, இரு நாடுகளும் இணைந்து வருவதற்கு முயலவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.
தென் கொரிய வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பதை வரவேற்பதாகக் கூறிய பேராயர் Soo-jung, பொருளாதாரப் பாகுபாடுகளைக் களைவதற்கு இரு நாட்டு அரசுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.