2013-04-09 16:12:20

ரியோ நகரின் ஏழைகளின் குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிடுமாறு திருத்தந்தைக்கு அழைப்பு


ஏப்.09,2013. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் அனைத்துலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணத்திட்டங்களில் மேலும் சில நிகழ்ச்சிகளைச் சேர்க்குமாறு பரிந்துரைத்துள்ளார் அந்நகர் பேராயர் Orani Tempesta.
அனைத்துலக இளையோர் தின நிகழ்வுகளுக்குப் பொறுப்பான, திருப்பீட பொதுநிலையினர் அவைக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ள பேராயர் Tempesta, ரியோ டி ஜெனிரோ நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள “favela” எனப்படும் ஏழைகளின் குடியிருப்புக்களைத் திருத்தந்தை பார்வையிடும் நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்க்குமாறு கேட்டுள்ளார்.
அத்துடன், அந்நகரின் புகழ்பெற்ற கிறிஸ்து மீட்பர் திருத்தலம், 17ம் நூற்றாண்டு Penha அன்னைமரியா திருத்தலம், அந்நாட்டின் ஆயர்களுடன் சந்திப்பு ஆகியவற்றையும் நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்குமாறு கேட்டுள்ளார் பேராயர் Tempesta.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.