2013-04-26 15:44:12

லெபனன் முதுபெரும் தலைவர் : ஏழைகளின் திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.26,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராக இருந்த சமயத்தில் வாழ்ந்த வீட்டைப் பார்க்கும்போது அவர் தற்போது வாழ்ந்துவரும் வாழ்வைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்று லெபனன் மாரனைட் முதுபெரும் தலைவர் கர்தினால் Beshara Rai கூறினார்.
பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, உருகுவாய், வெனெசுவேலா ஆகிய நாடுகளில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் லெபனன் நாட்டு குடியேற்றதாரர்களைப் பார்வையிட்டு வரும் கர்தினால் Rai, Buenos Airesல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறையில் ஒரு சிலுவை மற்றும் நிறைய நூல்கள் இருக்கின்றன என்றும், தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனவசதி என எதுவும் கிடையாது என்றும் கர்தினால் Rai தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் வழக்கமாகத் திருத்தந்தையர் தங்கும் இடத்தில் தங்காமல், புனித மார்த்தா இல்லத்தில் தங்குவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் கர்தினால் Rai கூறினார்.
கடவுளில் மூழ்கியிருந்த மனிதர் என்ற புனிதர் Sharbel குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்தான், பிரான்சிஸ் அவர்களின் வீட்டைப் பார்த்தவுடன் தனக்கு நினைவுக்கு வந்தது என்றும் லெபனன் முதுபெரும் தலைவர் ராய் கூறினார்

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.