2013-08-12 16:46:02

திருஅவையோடு இணைந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கிடைக்கும் மகிழ்வு, திருமுழுக்கின் அருளிலிருந்து நமக்குக் கிட்டுகிறது


ஆக.,12,2013. திரு அவையையும் கிறிஸ்துவையும் பிரிக்க முடியாது. திரு அவைக்குள்ளும் திருஅவையோடும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கிடைக்கும் மகிழ்வு, திருமுழுக்கின் அருளிலிருந்து நமக்குக் கிட்டுகிறது, என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்கள்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், அரபு உட்பட ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையோடு இணைந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கிடைக்கும் மகிழ்வுக்கும், திருமுழுக்கின்வழி நாம் பெற்றுள்ள அருளுக்கும் இடையேயானத் தொடர்பு குறித்து விவரித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.