2013-08-13 16:02:47

கொலம்பியாவில் 2014ல் அனைத்துலக இறைஇரக்க மாநாடு


ஆக.,13,2013. இறைஇரக்கம் குறித்த மூன்றாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க மாநாடு 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 19 வரை, கொலம்பியத் தலைநகர் Bogotaவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அனைத்துலக இறைஇரக்க மாநாடு நடைபெறவிருப்பது குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் Istima Tado ஆயர் Julio Hernando Garcia, கொலம்பியாவை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அலைக்கழித்திருக்கும் சண்டையின் காயங்கள் குணமடைவதற்கு ஒரு தளமாக இம்மாநாடு அமையும் எனத் தெரிவித்தார்.
கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே அரை நூற்றாண்டுகளாக சண்டைகள் இடம்பெற்ற பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் இந்நாள்களில், இறைஇரக்க மாநாடு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இச்சண்டைகளில் ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, 2006ம் ஆண்டில் உரோம் நகரிலும், 2011ம் ஆண்டு போலந்திலும் அனைத்துலக இறைஇரக்க அப்போஸ்தலிக்க மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.