2013-11-02 14:51:19

எகிப்தின் ஆலயங்களில் மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள்


நவ.02,2013. எகிப்தின் ஆலயங்கள், இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு மீண்டும் இவ்வெள்ளியன்று உள்ளாகியிருப்பதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வெள்ளி மாலை செபத்துக்குப் பின்னர் ஊர்வலமாக வந்து சில கிறிஸ்தவ இளைஞர்களுடன் மோதி, கெய்ரோவின் கிழக்குப் பகுதியிலுள்ள, அன்னைமரியா காட்சி கொடுத்த புகழ்பெற்ற Zaytoun கன்னிமரி ஆலயத்தைத் தாக்கியுள்ளனர்.
அவ்வழியே சென்றவர்கள் சிலரின் தலையீட்டால் இம்மோதல் அதிகமாகாமல் தடுக்கப்பட்டுள்ளது என அச்செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.
கடந்த அக்டோபர் 20ம் தேதி Al- Warraq அன்னிமரி ஆலயத்தில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.